ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை!

 


மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் வகையின் அடிப்படையிலுமே ஆரம்பகட்டமாக 2400 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.


பரீட்சையில் சித்தியடைந்த ஏனையவர்கள் தொடர்பில் இந்த நாட்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் அவர்களுக்கும் நியமனம் வழங்க முடியும் என நம்புகிறேன்.


இதற்கு மேலதிகமாக நீதிமன்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 9 மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.