ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைக


பாகிஸ்தானில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது வழமையானதுதான். இந்நிலையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்ட தலைமையக மருத்துவமனையில் தான் தாயொருவர் ஆறு குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் பிரசவித்துள்ளார்.பிரசவத்திற்காக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் ஏப்ரல் 18ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19 ம் தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி கூறுகையில்,

ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளில் 4 ஆண், 2 பெண் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் 2 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவையே.

அதே நேரத்தில் 6 குழந்தைகளும், அதன் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் குறித்து பெண்னுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பர்சானா கூறுகையில்,

தாயும், குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். வழக்கமான எடை அளவு எட்டும் வரை குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை 4.5 மில்லியன் பெண்களில் ஒருவருக்கே இந்த வகையான ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற முடியும். இது ஒரு மருத்துவ அதிசயமே என மருத்துவர்கள் வியக்கின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.