ஆயுததாரிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்கள்!


மியான்மரில் ஆயுதம் ஏந்திய குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.


56 இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. இந்நிலையிலேயே ஆயுததாரிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் மியன்மாருக்கான தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மேலும் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 8 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்து ஊடாக நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.