மீனவர் பிரச்சனைக்கும் கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

 


கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.

இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது என தெரிவித்தார்.-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.