ஜப்பானில் 6.3. ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


ஜப்பானில் (Japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake ) ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் (Japan) மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (17) 11.14 மணியளவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் 8 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உவாஜிமா (Uwajima) நகரில் 12 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது.குறித்த பகுதியில் அமைந்துள்ள இகாடா எரிசக்தி உலை வழக்கம் போல் செயற்படுவதாக அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எஹிம் பகுதியில் ஒசூ நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால், வீதியில் பாறைகள் உருண்டோடியதுடன் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.