மாணவனுக்கு நேர்ந்த துயரம்!


 மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பதின்ம வயது மாணவன் ஒருவர் திடீரென சுகயீனமுற்று கால்வாயில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வெத்தெவ அமரகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் என்ற 17 வயது இளைஞராவார்.உயிரிழந்த மாணவன் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பங்குபற்றவிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

வெத்தெவ பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன், போட்டி முடிவடைவதற்கு 500 மீட்டர் தூரம் இருக்கும்போது திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி வீழ்ந்துள்ளார்.

அதேவேளை ஓட்டப் போட்டி இடம்பெற்ற பகுதியில் கடும் வெப்பநிலை காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.