ஞாபகமறதி மேம்பட சிறந்த தகவல்கள்!!

 


ஞாபக மறதி என்பது முதியோர்களுக்கான வியாதியாக முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வேலைக்கு செல்லும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் கூட நினைவாற்றல் இழப்பால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் நினைவாற்றலை மேம்படுத்த உங்களுக்கு உதவும் முக்கிய டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.

நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, நினைவாற்றல் அதிகரிக் தினமும் 7-8 மணிநேரம் நன்கு தூங்க வேண்டும் என கூறப்படுகிறது. தினசரி போதுமான அளவு தூங்குவது நினைவாற்றலை மேம்படுத்துகிறது. அதே நேரம் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நரம்பியல் விஞ்ஞானி ரேச்சல் சம்மர்ஸ், நினைவாற்றலை ஷார்ப்பாக வைத்திருக் கதினமும் இரவில் 8 முதல் 10 மணிநேரம் தூங்க வேண்டும் என நம்புவதாக கூறுகிறார். இதன் மூலம் மக்கள் சிறந்த பலன்களை பெற முடியும்.

நினைவாற்றலை சிறப்பாக வைத்திருக்க தூக்கம் மற்றும் ஓய்வு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தினசரி தவறாமல் ஒர்க்அவுட் செய்வதும் முக்கியம். குறிப்பாக ஏரோபிக் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நினைவாற்றலை சிறப்பால் வைத்திருக்க உதவுவதில் மிகவும் பயனுள்ள வழியாக கருதப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வழக்கமான அடைப்படையில் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது அவர்களின் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துகிறது. உடற்பயிற்சி, நீச்சல், ரன்னிங் மற்றும் வாக்கிங் செல்வது மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்ததி, அதன் சிறப்பான செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கிறது.

தூக்கம் மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு, நினைவாற்றலை அதிகரிக்க அடுத்த சிறந்த வழி மைன்ட்ஃபுல்னெஸ் ஆகும். உங்களுக்கு வசதியாக இருக்கும்படி உட்கார்ந்து கொண்டு உங்கள் மனதிலும் உடலிலும் கவனம் செலுத்தும் பயிற்சி. இந்த பயிற்சி மூலம் prefrontal cortex-ன் தடிமன் அதிகரிப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளையின் இந்த பகுதி (prefrontal cortex) நம்முடைய கவனம் செலுத்தும் திறன் மற்றும் நினைவகத்துடன் தொடர்புடையது. எனவே இந்த பயிற்சி நினைவாற்றலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மூளைத்திறனை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் நினைவாற்றலை கூர்மையாக்கி கொள்ளலாம். உங்கள் மூளைக்கு சவால் விடும் செயல்களில் இதற்கு நீங்கள் ஈடுபட வேண்டும். உதாரணமாக. புதிய மொழியை கற்பது அல்லது ஒரு கருவியை புதிதாக வாசிக்க கற்பது போன்ற செயல்பாடுகள் நினைவக செயல்திறனை மேம்படுத்த உதவும். இது போன்ற செயல்பாடுகள் மூளையை தூண்டி, புதிய நரம்பியல் இணைப்புகளின் (neural connections) வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டும் என்றால் கடந்த கால விஷயங்களை மறந்து விடாமல் நினைவில் கொள்வது மிக அவசியம். பிஸியான இயந்திர வாழ்க்கைக்கு நடுவே அனைவரும் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலும் எந்த தகவலை சொல்வது அல்லது தெரிந்து கொள்வது என்றாலும் கூகுளைப் பயன்படுத்துகிறார்கள். கூகுளைப் பயன்படுத்தாமல் உங்கள் நினைவாற்றலுக்கு உயிரூட்டி, முன்பு படித்த,கேட்ட அல்லது பார்த்த விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.