நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு!


இந்திய - பொலிவுட் திரைப்பட நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இருவரை, ஏப்ரல் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.04.2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து நேற்று (15.04.2024) 24 வயதான விக்கி குப்தா மற்றும் 21 வயதான சாகர் பால் என்பவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபர்களை ஒன்பது நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் "குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.