விஜய்க்கு நோ சொல்லி அஜித்துக்கு ஓகே!!

 


அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.


குட் பேட் அக்லி திரைப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையான ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.


இந்த நிலையில், அஜித்தின் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்த அதே சமயத்தில், விஜய்யின் Goat திரைப்படத்தில் குத்து பாடலுக்கு நடனமாடவும் வாய்ப்பு வந்துள்ளதாம்.


ஆனால், முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக போகிறோம், அது குத்து பாடல் மூலமாக வேண்டாம், கதாநாயகியாகவே என்ட்ரி கொடுக்கலாம் என முடிவு செய்து, விஜய் படத்திற்கு நோ கூறிவிட்டாராம்.


ஸ்ரீலீலா நிராகரித்த இந்த குத்து பாடலில் தான் தற்போது திரிஷா நடனமாடியுள்ளாராம். இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.