இறுதிச் சடங்கிற்குச் சென்ற இருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

 


கெபித்திகொல்லேவ - கோலிபெந்த ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் மரண வீட்டிற்கு சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் மற்றுமொரு குழுவினருடன் அருகில் உள்ள ஏரியில் நீராடச் சென்றுள்ளனர்.


இதன்போது 4 பேர் ஏரியில் மூழ்கிய நிலையில், இருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.