இந்தோனேஷியாவில் இடம்பெற்ற செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியர் றமணனின் MIND'S EYES ஓவியக் கண்காட்சி.!📸

மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமாகிய வேதராணியம் கோகுலறமணன்

அவர்களின் 11 வது சர்வதேச ஓவியக் கண்காட்சி இம் மாதம் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரை இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இடம்பெற்றது.


உலகத் தரம் வாய்ந்த ஓவியக் கலைஞர்களை உருவாக்கி வெளியுலகிற்கு கொண்டுவரும் நோக்கில் சர்வதேச அளவில் செயற்ப்பட்டுக்கொண்டிருக்கும் Rainbow ART world அமைப்பானது இந்தியா ,இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த ஓவியக்கலைஞர்களை ஒன்றிணைத்து இவ் மாபெரும் கண்காட்சியை KENDRA ART SPACE ல் பிரமாண்டமான காட்சிக் கூடங்களில் நடத்தியிருந்தது. இதில் MIND'S EYES என்ற தலைப்பில் ஓவியர் ரமணணின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு சர்வதேச ஓவியர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. 


கடந்த காலங்களில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ள வேதராணியம் கோகுலரமணன் மட்டக்களப்பு ஓவியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.


சிறுவயதுமுதல் கலைத்துறையில் ஆர்வம்மிக்கவராக விளங்கிய இவர் தன்னை முழுமையாக வளப்படுத்திக்கொண்டு சிறப்புமிக்க ஓவியக் கலைஞராக திகழ்ந்து வருகின்றார். இவரது கடந்த கால தமிழர் பண்பாட்டியல் சார்ந்ததும் தமிழர் கூத்துமரபு சார்ந்ததுமான ஓவியங்கள் பல பலராலும் பாராட்டிப்பேசப்பட்டுள்ளதோடு பல ஓவியக்கண்காட்சிகளிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நவீனத்துவ ஓவியக்கலையில் ஈடுபாடுடைய இவர் சிங்கள மக்களிடம் சிறப்புற்று விளங்கிய தென்னங்குருத்தோலை படைப்புக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பல கலைத்துவமான படைப்புக்களை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.