மன்னாாில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில்
மன்னார்  பேருந்து தரிப்பிடத்தில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி  வழங்கும் நிகழ்வு இன்று(16)  வியாழக்கிழமை காலை 10 மணியளவில்    இடம் பெற்றது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்  ,முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்களால் இணைந்து மன்னார்  பேருந்து தரிப்பிடத்தில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி   மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது   பொதுமக்கள், அருட்தந்தையர்கள் ,இளைஞர்கள் யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி யை அருந்தி சென்றனர்






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.