உயிருடன் இருப்பவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!


ரஸ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல்  நடவடிக்கையில்  ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது,

இவர்களினால் அங்கு அனுப்பப்பட்டு ரஸ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் உயிருடன் இருப்பவர்களை   நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளாா்.

ரஸ்ய யுத்தகளத்தில்  போராடும்  இலங்கையர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  நாடாளுமன்றத்தில் நேற்று  திங்கட்கிழமை (13) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே  அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அவர் மேலும் கூறுகையில்,  எவ்வளவு அறிவுரைகள் ,எச்சரிக்கைகள்  வழங்கினாலும்  சமூகவலைத்தளங்களில்    வெளியாகும் போலியான விளம்பரங்களுக்கு ஏமாறும் ஒரு தரப்பினர் இன்றும் நாட்டில் உள்ளனர். 

 

ரஸ்யாவின்  சென் பீற்றர் நகரத்தில் காணி  வழங்கப்படுவதாகவும்,குடும்பத்தாருக்கு விசா மற்றும் 10 இலட்சம்  ரூபாய் வழங்கப்படுவதாகவும்  சமூகவலைத்தளங்களில்   விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கையர்கள் ரஸ்யாவுக்கு சென்று  நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.ஆகவே போலியான விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக அவா் குறிப்பிட்டுள்ளா்ா.

மேலும் ரஸ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.