ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?


 தேவையான பொருள்கள்


சிக்கன் - 1 கிலோ

முருங்கைக்காய் - 2 செட்டிநாடு காளான் மசாலா

தக்காளி - 2 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 6 பூண்டு ரொட்டி

கிராம்பு - 5

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பவுடர்/தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 4 பல் (பேஸ்ட் செய்து கொள்ளவும்)

கொத்தமல்லி - சிறிது

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு

பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)

இஞ்சி - 1 எலுமிச்சை அளவு

பூண்டு - 12 பல்

பட்டை - 1 துண்டு

கொத்தமல்லி - 1/4 கப்

புதினா - 1/4 கப்


செய்முறை


முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


பின் சிக்கனுடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், கிராம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, முருங்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.


பின்பு அதில் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு 2 நிமிடம் வதக்கிய பின், அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிவது போன்று தெரியும் போது, அதில் சிக்கனை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நிறம் மாறும் வரை சிக்கனை நன்கு வதக்க வேண்டும்.


பின் மூடி வைத்து குறைவான தீயில் 5-8 நிமிடம் சிக்கனை நீர் விடும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.


பிறகு ஒரு கப் சுடுநீரை ஊற்றி, 10-15 நிமிடம் சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.


சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பவுடர், மல்லி தூள், பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.