கடல் நீர் உள் வாங்கியதால் மக்கள் அச்சம் !


நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள்வாங்கியது.

மன்னார் மாவட்டத்தில்  புதன்கிழமை(22) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில்   மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்  திடீரென கடல் நீர் உள் வாங்கிய தோடு,கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன.எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.