ஸ்பைசி மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

 



தேவையான பொருள்கள்


பஜ்ஜி மிளகாய் - 4


மேல் மாவிற்கு :


கடலைமாவு - ஒரு கப்


அரிசி மாவு - ஒரு கைப்பிடி


மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி


பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி


ஓமம் - அரை தேக்கரண்டி


உப்பு


சோடா உப்பு


ஸ்டஃபிங் செய்ய :


புளித்தண்ணீர் - 6 அல்லது 7 தேக்கரண்டி


மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி


தனியா தூள் - ஒரு தேக்கரண்டி


பெருங்காயத்தூள்


வெல்லம் - சிறிது


உப்பு - தேவையான அளவு


செய்முறை


✅ஸ்டஃபிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக கலந்து வைக்கவும்


✅மிளகாயை குறுக்கில் கீறி வைக்கவும். உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.


✅மிளகாயின் உள்ளே கலந்து வைத்திருக்கும் பேஸ்ட்டை நன்கு தடவி விடவும்.


✅மேல் மாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.


✅மிளகாயை பஜ்ஜி மிக்ஸில் தோய்த்து எடுக்கவும்.


✅வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோய்த்து எடுத்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.


✅டபுள் ஃப்ரை செய்ய பஜ்ஜியை பத்து நிமிடம் ஆற வைத்து துண்டுகள் போடவும்.


✅அதை மீண்டும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இது இன்னும் சுவையாக இருக்கும்.


✅மாலை நேர ஸ்நாக்ஸிற்கு ஏற்ற ஸ்பைசியான மிளகாய் பஜ்ஜி ரெடி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.