வாழைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்


வாழைக்காய் - ஒன்று


மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி


உப்பு - தேவைக்கு


கரம் மசாலாத் தூள் - அரை 

மேசைக்கரண்டி


மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி


எண்ணெய் - பொரிக்க


செய்முறை


🔥முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். வாழைக்காயின் தோலை சீவி வைக்கவும்


🔥இரண்டாக நறுக்கி 5 நிமிடம் வேக வைக்கவும்.மெல்லியதாக, வட்ட வட்டமாக நறுக்கி தூள் வகைகளை சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.


🔥ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும்.மிகவும் ருசியான க்ரிஸ்பி சிப்ஸ் ரெடி. சாம்பார் சாதத்திற்கு பொருத்தமான டிஷ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.