அச்சு முறுக்கு செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்


பச்சரிசி - 1 கிலோ


சர்க்கரை - 300 கிராம்


முட்டை - 3


தேங்காய் - 1


எண்ணெய்


செய்முறை


☀முதலில் தேங்காயை துருவி கெட்டியாக‌ பாலெடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நனைய‌ வைத்து டவலில் ஈரத்தை போக்கி, நீர் விடாமல் மிக்சியில் நைசாக‌ பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.


☀பச்சரிசி மாவு முட்டை கலவை


☀அத்துடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.


☀தேங்காய் பால் சர்க்கரை


☀அதில் மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.


☀அரிசி மாவு சேர்க்கவும்


☀தோசை மாவு பதத்தில், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாக இருக்கும். நீர்க்க இருந்தால் முறுக்கு மொறுமொறுப்பாக வரும்.


☀தோசை மாவு பதம்


☀வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் முறுக்கு அச்சினை முக்கி சூடாக்கவும். அச்சு சூடாக இருந்தால்தான் மாவு அதில் ஒட்டும்.


☀முறுக்கு சுடுதல்


☀சூடான‌ அச்சை மாவில் முக்கால் பாகம் அமிழ்த்தி எடுக்கவும். முழுவதும் அமிழ்த்தினால் முறுக்கு அச்சில் இருந்து கழன்று விழாது. கவனம் தேவை.


☀அச்சை அமிழ்த்தல்


☀மாவுடன் கூடிய அச்சை எண்ணெயில் அமிழ்த்தவும். மாவு சற்று வெந்ததும் முறுக்கானது அச்சில் இருந்து பிரிந்து வந்துவிடும்.


☀எண்ணெய்யில் முறுக்கு


முறுக்கு சிவந்து வந்ததும் எடுக்கவும்.


☀சிவந்த முறுக்கு


☀இதே போல் எல்லா மாவையும் முறுக்காக சுட்டு எடுக்கவும். சட்டியின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று பொரித்து எடுக்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.