காற்றின் மொழி!-கவிபாஸ்கர்!


இசை...பெரிதா...

மொழி பெரிதா....

கேள்விக் கணையால்

வேள்வி.. வளர்கின்றது!


இசைமொழி..என்ற

வசைமொழிச் சண்டை

வலை தளத் திண்ணையில்

சக்காளத்தியா..

சண்டையாகச் சந்தி சிரிக்கிறது...


மொழிதான்..

பெரியது.. என்று ஒருவர்

சட்டையைப் பிடிக்கிறார்.. 

இசைதான் பெரியது என்று 

ஒருவர் வேட்டியை இழுக்கிறார்..


எல்லாம்..இழந்து...

கொளுத்தும் வெயிலில்

அழுகையும்..வியர்வையும் வடிய

அம்மணமாய்.. போகிறது..

ஒட்டுத்துணியில்லாமல்

மொழியும்.. இசையும்...


இதயம்... பெரிதா..

மூளை பெரிதா..

உடல் பெரிதா

உயிர் பெரிதா..??


இதயம் இருப்பவர்

இதயம் பெரிதன்பார்..

மூளை இருப்பவர்.. மூளை

பெரிதென்பார்..

எதுவும்.. இல்லாதவர்..

எதுவும்  தெரியாதவர்..

எது பெரிதென்பார்...!!?


அவரவர் ரசனையில்..

அவை அது பெரிதே!


உலகம்....தோன்றிய போது..

காற்றுதான்... தோன்றியது!

காற்றுதான்... இசை...! 

காற்றால்...சுவாசிக்கலாம்

பேசிக் கொள்ள முடியுமா??


இசையா..மொழியா.. இந்த.. 

நீளமான நீயா..நானா..சண்டையில்

மொழியால்தான்... 

கருத்துரைத்து கற்பிக்க.. 

வேண்டியிருக்கிறது.. 

இசையால் சொல்லி 

இசைவாரோ!!.. உணர்வார்.. 

உரைப்பாரோ..!!?


பிறக்கும் போதே

மனிதன் பேசுவதில்லை...

வெறும் சத்தம் தான்..

சத்தம் தான் இசை...

சத்தத்தின் சந்தம்தான் மொழி!


வெறும்...

காற்று மட்டுமே முத்தமிட்டால்

உலகம் ஊமைதானே..


இசையும்..மொழியும்... 

தாய்.. தந்தை!

தாய் தந்தையின்றி...உயிர்த்தல்

உயிரில்லா விந்தை!


புரிந்தவர்க்கு - என் 

திசை வழி புரியட்டும்.. 

இல்லையேல் ...


தினந்தோறும்

இழையோடும் நல்ல 

இசை மொழி அறியட்டும்..!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.