மனோவுடன் கள விஜயம் வடிவேல் சுரேஷ்!

 


இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவில் தோட்ட முகாமைத்துவ அதிகாரி, பெண் ஒருவரை தாக்குவதை போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு நேற்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் கள விஜயமொன்றை மேற்கொண்டார்.


இதன்போது தோட்ட முகாமைத்துவ அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் பிரதேச மக்களிடமும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியதோடு, சட்டம் கடுமையாக்கப்பட்டு குற்றவாளியான தோட்ட முகாமைத்துவ அதிகாரிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். இந்த விடயம் தொடர்பில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பொலிஸாருக்கு அறிவுறுத்தினார். தோட்ட அதிகாரியின் கீழ்த்தரமான இந்நடவடிக்கை பெருந்தோட்ட நிர்வாகங்களில் அடக்கு முறையில் உச்சம், நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.


தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் பதில் சாட்டை அடியாகவே இருக்கும் என எச்சரித்தார். மேலும் தோட்ட அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கள விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.