அறிக்கை ஜூலை 26 இல் சமர்ப்பிக்க உத்தரவு!

 


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கூற்று தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, ஜூலை 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா அபேவிக்கிரம குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தமக்கு தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.