முள்ளிவாய்கால் நினைவேந்தல் வெள்ளவத்தை கடற்கரையில் அஞ்சலி!

 வடக்கு, கிழக்கில் போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருந்து இன்று தென்பகுதி மக்களால் வெள்ளவத்தை கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.



வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோரத்தில், சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது இறுதிப்போரில் உயிர்நீத்தவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா உள்ளிட்ட பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிக்கு வருகை தந்த சிங்கள ராவய அமைப்பினர் நல்லிணக்கம் என்று கூறுகின்றீர்கள்.

எம்மையும் யுத்தத்தில் உயிர்தீர்த்த இராணுவத்தினரை இந்த பகுதியில் ஒன்றிணைந்து நினைவு கூர இடமளியுங்கள் என கூறி குறித்த பகுதிக்குள் நுழைய எத்தனித்தனர்.

இதன் காரணமாக வெள்ளவத்தை கரையோரப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த அமைப்பினர் யுத்தத்தின் போது உயிரரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர இடமளியுங்கள் என கூறியதோடு, தமிழீழ விடுதலை புலிகளை நினைவு கூர முடியுமாயின் ஏன் எம்மால் இராணுவத்தினரை நினைவு கூற முடியாது என கூறி குழப்பம் வினைவித்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கும் வகையில் செயற்பட்ட அமைப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளு முள்ளு இடம்பெற்றதை அடுத்து அங்கு பதட்டமான சூழ்;நிலை உருவாகியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.