காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்!

 வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டமானது தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2 ஆயிரத்து 645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், இனப்படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர்மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.