மன்னாரில் முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்!
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மன்னாரில் நினைவு கூரப்பட்டது.
தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் மன்னார் கிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை