நடுவானில் திடீரென குலுங்கிய சிங்கப்பூர் விமானம்; பயணி உயிரிழந்த சோகம்!

https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F5b270998-035c-468d-b78f-0b052358375f%2FGridArt_20240521_180022969.jpg?rect=643%2C0%2C3453%2C2302&auto=format%2Ccompress&w=1200 லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் நடுவானில் திடீரென கடுமையாகக் குலுங்கியதால் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் மியான்மர் அல்லது தாய்லாந்துக்கு இடையில் நடுவானில் குலுங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால், விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில், `சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ 321 போயிங் 777-300ER, லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூருக்கு மே 20-ம் தேதி இயக்கப்பட்டது. வழியில் விமானம் கடுமையாகக் குலுங்கியது.

பின்னர், பாங்காக்குக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம் இன்று மாலை 03:45 மணியளவில் தரையிறங்கியது. விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். அதோடு சிலர் காயமடைந்தனர். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்கள் முன்னுரிமை. தாய்லாந்திலுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறோம். அதோடு, தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்குக்கு அனுப்புகிறோம்' என்று தெரிவித்திருக்கிறது.

விமானம் திடீரென தனது வேகத்தில் வேக மாறுபாட்டைக் காணுதல் உள்ளிட்ட சில காரணங்களால் இத்தகைய நிகழ்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விமானம் இதுபோன்று சிலசமயம் எந்த நேரத்திலும் குலுங்கக்கூடும் என்பதால் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.