இலங்கை இராணுவத்தினர் 15667 பேருக்கு பொது மன்னிப்பு!


முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2024 மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கு ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தில் 2023 டிசம்பர் 31, மற்றும் அதற்கு முன் விடுமுறை இன்றி பணிக்கு கமூகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு மாத பொது மன்னிப்புக் காலத்தின் முடிவில், விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தொண்டர் படையணியின் 15294 படையினருக்கு தற்காலிகமாக சேவையிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் அனுமதி இன்றி கடமைக்கு சமூகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவத்தைச் சேர்ந்த 373 பேருக்கு இராணுவத்தை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.