மழைநீரில் மூழ்கி 5,000 நெல் மூட்டைகள் பாழ் !

 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

நெல் மூட்டைகள் மீது தார்பாய் போடப்படாமால் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

மழையில் நனைந்த நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டால் வீணாகப் போய்விடும் எனவும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் நெல் கொள்முதல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.