திருமாவளவனுக்கு பெங்களூருவில் சிகிச்சை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் தொடர்பில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“மக்களவைத் தேர்தலையொட்டி, தொடர்ந்து பிரசாரம் செய்ததால் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் குணமாகும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்,” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் விசிக விருது வழங்கும் விழாவுக்கு அனைத்து பொறுப்பாளர்களும் கட்டாயம் வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை