ஜனாதிபதி யாழ் மற்றும் கிளிநொச்சி விஜயம்!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைப்பதுடன் யாழ்ப்பாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார்.


அதுமட்டுமல்லாது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற உள்ளது.


குறித்த செயற்பாடுகளை கண்காணிக்கும் முகமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விஜயம் தொடர்பான இறுதித் திகதி தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.