யாழ் "வைத்தியசாலை வீதியில்" மரநடுகை திட்டம்.!📸

 


யாழ் போதனா வைத்தியசாலையின் முன்புறமாக உள்ள "வைத்தியசாலை வீதியில்" மரநடுகை திட்டம் அறிமுகமானது.

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை,  மற்றும் Green Layer  சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றாக இணைந்து வைத்தியசாலை முன்புறமாக காணப்படுகின்ற வீதியின் நடுப்பகுதியில் மரங்கள் நாட்டப்பட்டன.


 வைத்தியசாலை வீதியானது பொது மக்களின் அதிகரித்த பாவனையில் உள்ள சன நெரிசலான பகுதி. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் ஊடாக நடந்தும் ஏனைய வாகன வசதியினூடாக பயணிக்கின்றார்கள். 


ஆகவே இப்பகுதி கடுமையான வெயில், வெப்பம் மற்றும் புறக் காரணிகளால் அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பப்படுகின்றது.


ஆகவே நாம் இன்று வீதியின் நடப்பகுதியில் பொருத்தமான குழிகளை வெட்டி தேவையான உரம் கலந்த மண்ணை இட்டு பாதுகாப்பாக வளரக்கூடிய வகையில் உயர்ந்து வளரக்கூடிய நிழல் மரங்கள் நட்டு வைக்கப்பட்டன.


இவ்வாறு  வீதிகள், பொது இடங்கள், விளையாட்டு மைதானங்கள்,  மற்றும் பொருத்தமான இடங்களில்  இவ்வாறு  மரங்கள் நடப்பட வேண்டும் என சத்திய மூர்த்தி முகநூல் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.