எழுத்தாயுதம்..!!


காகித அரங்கில் நடனம் புரியும்

பேனா முனைகள் 

ஏதோ ஒன்றை 

எழுதிக் கடக்கின்றன. 


எழுத்து ஒரு சக்தி

எழுத்து ஒரு ஊற்று. 

எழுத்து ஒரு ஆயுதம்

எழுத்து ஒரு ஆறுதல் 


சந்தனச் சிற்பங்களை

செதுக்குகிற எழுத்துகள் தான் 

பொன்னேட்டின் 

புள்ளிகளாகின்றன நாளை... 


மாற்றங்களுக்கான

மகத்தான பணியில் 

நிறைந்து நீளட்டும்

உங்கள் எழுத்துகளும்.... 


கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.