செட்டிநாடு ஸ்டைல் முருங்கைப்பூ கூட்டு செய்வது எப்படி?


தேவையானவை
:  


முருங்கைப்பூ 1 கப், 


சின்ன வெங்காயம் 10, 


பச்சை மிளகாய் 2, 


பாசிப்பருப்பு கால் கப், 


மஞ்சள் தூள் 1 சிட்டிகை, 


உப்பு தேவைக்கேற்ப, 


சாம்பார்பொடி முக்கால் டீஸ்பூன்.


தாளிக்க:  


எண்ணெய் 2 டீஸ்பூன், நெய் அரை ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, கறிவேப்பிலை 1 ஆர்க்கு.


செய்முறை:  


முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும். அனைவருக்குமே ஆரோக்கியத்தைத் தரும் இந்தக் கூட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.