விவாகரத்து பெறும் முன்னணி பிரபலங்கள்!!

 


தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ்வதென முடிவு எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார்.

மேலும் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது முதலையே முதலே பின்னணி பாடல்கள் பலவற்றை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

சில நாட்களாகவே இவ் விடயம் தொடர்பில், தகவல்கள் வெளிவந்த நிலையில் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக ஜி.வி பிரகாஷ் தனது x  தளத்தில்  வெளியிட்டுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.