கல்விக்கு வயது தடையா?


கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லையென நிரூபித்துள்ளார்  80 முதியவர் ஒருவர். தற்போது  நடைபெற்று வரும் கல்வி பொது .தராதர சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலபேரின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வா என்பவரே  இவ்வாறு கா.பொ.த சாதாரண தர பரீட்சையை எழுதியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர் விசேடமாக கணித பாட பரீட்சையில் தோற்றியுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் இவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.   

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு என்பது சாதாரண வார்த்தைகள் அல்ல. 

ஒரு மனிதனின் அழகும் ஆளுமையும் கல்வி கற்பதால் தான் மேம்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.