ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

 


சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. அவர் ஆரம்பத்தில் விஜய் டிவி தொடர்களில் நடித்தாலும், தற்போது சன் டிவியில் இருந்து வருகிறார்.


தற்போது இனியா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் ஆல்யா மானசாவின் கணவர் சன்ஜீவ் அதே சேனலில் கயல் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


ஆல்யாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்கள் உடன் இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.


வெளியில் கூட்டி செல்லும்போது குழந்தைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், நாய்க்கு சங்கிலி போடுவது போல, குழந்தைகள் இருவரது கையையும் தனது துப்பட்டாவில் கட்டி வைத்து அவர்களை அழைத்து செல்கிறார் ஆல்யா.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆல்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர். குழந்தைகள் வெவ்வேறு திசைகளில் ஓடினால் உங்களுக்கு சங்கு தான் என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.