உணவு வகைகளின் விலைகள் குறைப்பு!

 


நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில  இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, ஒரு கொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும், சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.