போனில் மூழ்கிய இளம் பெண்ணுக்கு தாயால் நேர்ந்த துயரம்!!

 


பரீட்சைக்கு படிக்காமல் தொலைபேசியில் அதிகநேரம் செலவழித்த மகளை தடியால் தாக்கி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சீதா தேவி எனபவரின் 22 வயதான மகள் நிகிதா போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்காக அவர் படித்து வந்தார்.

ஆனால், படிப்பதில் கவனம் செலுத்தாமல், போனில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், நிகிதா செல்போன் பயன்பாட்டைக் குறைக்கவில்லை.

இதனால் அவரது செல்போனை சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் எடுத்து வைத்துக் கொண்டனர். இனிமேல் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்த மாட்டேன் என்று நிகிதா உறுதியளித்த காரணத்தால், அவரிடம் மீண்டும் செல்போனை அவரது குடும்பத்தினர் தந்துள்ளனர்.

தன்னிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டதற்கு தனது தாய் சீதா தேவி தான் காரணம் என்று அவருடன் நிகிதா சண்டை போட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிகிதாவின் தந்தை, சகோதரி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நிகிதாவுக்கும், சீதா தேவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது அருகில் கிடந்த தடியை எடுத்து நிகிதா, அவரது தாயை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அப்போது நிகிதா கையில் இருந்த தடியைப் பறித்து சீதா தேவி சரமாரியாக தாக்கினார். இதில் நிகிதாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

இதையடுத்து வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பில் தனது கணவருக்கு சீதா தேவி, செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதன் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிகிதா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சீதா தேவி மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சீதா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.