வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!!

 


இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது  இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.


புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக  இலங்கை தற்போது மாறியுள்ளதாக கடிதம் ஒன்றைக் அனுப்பி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


1949 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர்  இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் வழங்கப்பட்டன.


1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து  இலங்கை அரசு விசா கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் 2012ல் ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.


அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்பட்டது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.