யாழில் போதை மாவாவுடன் இருவர் கைது.!


யாழில் போதை கலந்த மாவா பாக்குடன் குருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரை யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சாரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.


குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவதாக யாழ் குரு நகர் பகுதியில் மாவா கலந்த பாக்கு இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.


அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்ததில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருசரைகளில் போதை பூட்டப்பட்ட பாக்கு மீட்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.