விரோதமாக சாரய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை யாழில் கைது!
போயா தினத்தில் சட்ட விரோதமாக சாரய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை யாழில் கைது செய்துள்ள பொலிஸார் ஒரு தொகுதி சாராய போத்தல்களை மீட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது சட்டவிரோதமாக மறைத்து சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் ஒரு தொகுதி சாராயப் போத்தல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை