ஆட்டு ஈரல் கிரேவி செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்


ஆட்டு ஈரல் கால் கிலோ 

வெங்காயம் இரண்டு (பெரியது) 

தக்காளி 2 

இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் 

எண்ணெய் தேவைக்கேற்ப 

மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் 

தனியா தூள் 3 டேபிள் ஸ்பூன் 

உப்பு தேவைக்கேற்ப 

கரம் மசாலா தூள் கால் டேபிள் ஸ்பூன் 

பச்சைமிளகாய் ஒன்று 

வினிகர் கால் டீஸ்பூன் 


செய்முறை :


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


ஈரலிலைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.


வாயகன்ற வாணலி ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


லேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.


மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா)னைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.


கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும்.


தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும். அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும்.


சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி. 


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : நாம் சாதம், மோர்குழம்புடன் (அ) சாம்பார் இவற்றுடன் தொட்டுக் கொள்ள செய்யலாம். ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் பொருந்தும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.