கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!!


கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்ததை அடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  கனடா தூதரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது இந்தியா. 

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது எனவும்   சீனா முதலிடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டதுடன்

ரஷ்யா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. 

கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம், அத்துடன் 

வெளிநாட்டுத் தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.