இலங்கையின் கடன் 100 பில்லியன் அமெரிக்கா டொலர்கள்!

 


இலங்கையின் கடன் 100 பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடந்துள்ளது.


இலங்கை மீள செலுத்த தவறிய கடன் மற்றும் வட்டி 6.4 பில்லியன் அமெரிக்கா டொலர்களை தாண்டியுள்ளது.


கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ரூபா 3,880 பில்லியன் உள்நாட்டிலிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது.


பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை ஆகியவற்றின் 3 பில்லியன் அமெரிக்கா டொலர் கடன்கள் அரச கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 


மறுபுறம் திரு ரணில் விக்ரமசிங்கே உட்பட்ட பல மூத்த அரசியல் பிரமுகர்களுக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்கள் மட்டும் ரூபா 650 பில்லியன் கடனை மீளளிக்கத்  தவறி இருக்கின்றார்கள்.


ஆனால் இவ்வாறு தொடரும் நிதி  நெருக்கடிகளிலிருந்து மீள அவசியமான Governance Reforms குறித்து எவ்வித கரிசனையும் திரு ரணில் விக்ரமசிங்கே தரப்புக்கு இல்லை.


நிர்வாக இயலாமை (Administrative Incapacities), கொள்கை தோல்விகள் (Policy failures), குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த விருப்பமின்மை (Unwillingness to enforce the law against Criminals) என்பன இயல்பாக்கபட்டுள்ளன. 


இந்த அவலங்களின் விளைவாக  25% க்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.


46 வருடமாக தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்கப்படுகின்ற இலங்கையின் ஏற்றுமதி மதிப்பு 12 பில்லியனுக்குள் இன்றும் சுருங்கிக்  கிடக்கின்றது.


குறைந்தபட்சம் மிக அவசியமான நேரடி முதலீடுகளை கூட ஈர்க்க முடியவில்லை. 


Imbalanced regulatory and policy frameworks,Inconsistent policies at various levels என பல ஆயிரம் பிரச்சனைகள் தீராமல் தலைவிரித்தாடுகின்றன.


எதற்கும் தீரவில்லை.காலத்திற்கு காலம் கடன் வாங்கி  IMF Targets பற்றி மட்டுமே சிந்திக்கின்றார்கள்.  


இதற்கிடையில் கடன் மறுசீரமைப்புக்கு (Bilateral Debt Restructure) வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள். 


கடன் வழங்குனர்கள் கடன்களை மீள செலுத்த வழங்கிய கால அவகாசத்தை  (maturity extension) முன்வைத்து திவாலாகிய நாடு  மீண்டு விட்டதாக கதை சொல்லுகின்றார்கள்.  


ஆனால் கடன்களை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் குறித்தும்  SP Global Ratings, Fitch Ratings, Moodys ratings போன்ற நிறுவனங்களால் மட்டுமே மதிப்பிட முடியும் என்பதை மறைகின்றார்கள். 


இலங்கையின் 12.5 பில்லியன் அமெரிக்கா டொலர் International Sovereign Bonds கடன்கள் தொடர்பான exchange முழுமையடையாமல் மீள முடியாது என்பதைக்  கூடச்  சொல்லுகின்றார்களில்லை.


இலங்கையின் Public Debt to GDP Ratio 110% ஆக உள்ளது. 


2032 ஆம் ஆண்டளவில் மேற்படி  கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆகக் குறைக்க IMF இலக்கு வைத்துள்ளது. 


ஆனால் 2032 ஆம் ஆண்டில் மேற்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் இலக்கை எட்டினாலும் கூட நாடு மீள முறிவடையாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை .


Public Debt to GDP 92 %ஆக இருந்த போது ஆபிரிக்க நாடான கானா (Ghana) முறிவடைந்திருந்தது. 


ஆகவே Governance Reforms உட்பட்ட  கட்டமைப்பு மாற்றங்களே இலங்கைத் தீவை காப்பாற்றும் .


ஆனால் ஒற்றையாட்சியை கட்டிப்பிடித்து சிங்கள பேரினவாத சித்தாந்தத்தை விதைத்து  Corrupted Systemக்குள் சிந்திக்கும் திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் அவர்  கூட்டாளிகளாலும் மேற்படி மாற்றங்களைச்  செய்ய   முடியாது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.