யாழ் பல்கலையில் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை (05.06.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


மாணவர்களின் கடமை கற்பது மட்டுமல்ல போராடுவதும் தான்! என்பதை உணர்த்தியவர் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுதினம் தமிழ்த் தேசிய மாணவர் எழுச்சி நாளாக நினைவேந்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.