ஜெனிவாவில் செந்தில் தொண்டமான் – வசந்த சமரசிங்க சந்திப்பு!


ஜெனிவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் NPPயின் தொழிற்சங்கவாதியான வசந்த சமரசிங்கவை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து பேசப்பட்டது.

அத்துடன், இருவருக்குமான நீண்டகால நட்பு பற்றியும், உலகளவில் தொழிற்சங்கத்தின் நலனில் இருவரும் வலுவாக இணைந்து பணியாற்றியமையும் இதன்போது நினைவூட்டப்பட்டது.

இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் ராஜதுரையும் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.