கனடா வாழ் அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த துயரம்!!

 


கனடா வாழ் சகோதரன் யாழில் தன் கூடப்பிறந்த தம்பியை ஏமாற்றி 20 பரப்பு காணியை கு ஏமாற்றிய வாங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இந்நிலையில் காங்கேசன்துறையில் உள்ள அக்கானியின் தற்போதையை பெறுமதி கோடிகளுக்கு மேல் உள்ள நிலையில் ஏமாற்றப்பட்ட தம்பி பொலிஸார் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள 40 பரப்பு காணி குறித்த சகோதரர்களின் பெற்றோரின் பெயரில் இருந்துள்ளது. 1990ம் ஆண்டு யுத்த காலத்தின் போது காங்கேசன்துறைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து யாழில் வேறு இடங்களில் வசித்து வந்த நேரத்தில் 20 வயதான அண்ணன் புலம்பெயர்ந்து கனடா சென்றுள்ளார்.


அந் நேரம் 16 வயதான தம்பி பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் தந்தை சீமெந்து தொழிற்சாலையில் முக்கிய பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டு தம்பிக்கு திருமணம் நடைபெற்றது. மீண்டும் யுத்தம் ஏற்பட்ட போது பெற்றோர் மற்றும் மனைவியுடன் தம்பி கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கு கனடா அண்ணன் வாங்கிய வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.


இந் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு  கொழும்பில் உள்ள வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீடு வாங்கவுள்ளதாக கூறி எழும்புமாறு கனடாவிலிரு்நது அண்ணன்  கூறியதை அடுத்து தம்பி யாழ்ப்பாணத்திற்கு   வந்து நல்லுார் பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வருகின்றார்.


இந் நிலையில் கடந்த மாத இறுதியில் கனடாவிலிருந்து வந்த அண்ணன் பெற்றோரின் சொத்தான 40 பரப்பு காணியையும் இரு பகுதிகளாக பிரிப்போம் என கூறியுள்ளார். அதற்கு தம்பியும் உடன்பட்ட நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அந்த காணியை அண்ணனே முழுமையாக துப்பரவு செய்ததுடன் தானே காசு கொடுத்து அளந்து அந்த ஆவணத்தையும் எடுத்தார்.


அதன் பின் பெற்றோரின் சொத்தை எமக்கு மாற்றுவதற்காக பெற்றோரின் மரணச்சான்றிதழ்கள் மற்றும் பல ஆவணங்களை அண்ணன்  கொழும்பில் தங்கியிருந்து கேட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி அவற்றை எடுத்துக் கொடுத்திருந்தார். காணியை இரு பகுதிகளாக பிரிந்து எழுதி வைத்துள்ளதாகவும் மனைவியுடன் கொழும்புக்கு வருமாறு கேட்டார்.


கொழும்பில் சிங்கள சட்டத்தரணி ஒருவரே குறித்த காணியை எழுதியிருந்தார். தம்பிக்கு சிங்களம் மிகக் குறைந்த அளவே தெரியும் என கூறபடும் நிலையில் உறுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.


அண்ணன் தவறு செய்ய மாட்டார் என நினைத்து காணியின் வரை படத்தில் எனது பங்கு குறிக்கப்பட்டிருந்ததை பார்த்து திருப்தி அடைந்து சட்டத்தரணி நீட்டிய இடத்திலெல்லாம் நானும் மனைவியும் கையொப்பம் இட்டோம் என தம்பி கவலையுடன் கூறியுள்ளார்.


காணி எழுதி முடிந்த பின்ன அடுத்த நாள் எனது வங்கிக் கணக்குக்கு 30 லட்சம் பணத்தை வைப்பிலிட்டதாக அண்ணன் கூறினான். நான் மிகுந்து ஆச்சரியப்பட்டு ஏன் அண்ணா இவ்வளவு பணம் வங்கியில் எனக்காக போட்டீர்கள் என கேட்ட போது அது காணி நீ எனக்கு எழுதி தந்ததுக்கான பணம் என கூறினாராம் அண்ணா.


அதன் பின்னரே  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த தம்பி,   யாழில் உள்ள சட்டத்தரணி ஒருவரை அணுகினேன். அவர் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது  கொழும்பில் வைத்து எழுதிய காணி உறுதியின் பிரதி சட்டத்தரணிக்கு அனுப்பினார் அண்ணன்.


அதில் எனது பங்கான 20 பரப்பு காணியையும் அண்ணனுக்கு நன்கொடையாக வழங்குவதாக  தம்பியிடம் ஏமாற்றி  எழுதி வாங்கியுள்ளார். இதனையடுத்து சட்டரீதியாக அனுகமுடியாது  என  சட்டத்தரணி  கையை விரிக்க பொலிஸாரிடம் தம்பி முறையிட்டுள்ளாராம்



அதுமட்டுமல்லாது நியாயம் கேட்ட தம்பியை   தரக்குறைவாக கடுமையாக ஏசிய அண்ணன் கொலை அச்சுறுத்தலும் விடுத்ததுடன்  குடும்பத்துடன்  கனடா சென்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.


 இந்நிலையில்  கூடப்பிறந்த  அண்ணனே  தம்பியை ஏமாற்றிய 20 பரப்பு காணியை  மோசடி செய்த  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.