வைரலாகும் நடிகை அமலா பால் குழந்தையின் பெயர்!!

 


நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அந்த குழந்தைக்கு இலை என பெயரிடப்பட்டுள்ள நிலையில்  இந்த பெயருக்கான அர்த்தம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் விவாகரத்து பெற்றார். சில மாதங்களுக்கு முன்னர் அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.


சமீபத்தில் அமலா பாலுக்கு நடந்த வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் பெருமளலு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் வாழ்த்துக்களையும் குவித்தது. 


ரசிகர்கள் அமலாபாலுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என பெரும் எதிர்ப்பார்பில் இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர்  அமலாபாலுக்கு ட்வின்ஸ் பிறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. 


இந்த நிலையில், தனக்கு ஜூன் 11ஆம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்தது என்றும், அந்த குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளதாகவும் அமலா பால் காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். 


அதன் பின்னர்  ரசிகர்கள் பலரும் அமலாபாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு, குழந்தையின் பெயர் அர்த்தத்தையும் தேடி வருகின்றனர்.


தற்போது, நடிகை அமலா பாலின் மகன் பெயருக்கான அர்த்தம் இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றத. அதன் படி பார்த்தல், இலை என்ற பெயர் ஹிப்ரு மொழி பெயராம். அந்த பெயருக்கு தமிழில் சொர்கம், பரலோகம், விண்ணுலகம் என்று அர்த்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.