இராணுவ முகாமிற்கு போராளிகளை தெரிவு செய்து அனுப்பியவர் பிரித்தானியாவில்.!

 


வவுனியா யோசப் மனித இறச்சிக்கடை இராணுவ முகாமிற்கு போராளிகளை தெரிவு செய்து அனுப்பியவர் பிரித்தானியாவில்.!


இலங்கை இராணுவ புலனாய்வாளன் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளான்.


2009 ம் ஆண்டு இறுதி யுத்ததின் போது காயமடைந்த போராளிகள் உட்பட பலர் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் நுளைந்த போது  முல்லைத்தீவு சிவபுரம் இராணுவ முன்னரங்க காவலரனில் நின்று பல காட்டிக்கொடுப்புகளில் புலவன் என்ற நபர் ஈடுபட்டதாக சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டுவரும் நிலையில் புலவர் என்ற நபர் தொடர்பில் மேலும் புதிய திடுக்கிடும் சாட்சியம் ஒன்று வெளியாகியுள்ளன.


கடற்புலிகளில் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான அருணன் மாஸ்ரரை காட்டிக்கொடுத்ததாக மீண்டும் ஒரு உண்மை அம்பலமாகியுள்ளது. 


கிளிநொச்சி காப்பக பொறுப்பாளர் பூவிளி அவர்களின்  கணவரான கடற்புலிகளின்  தீவக கோட்ட அரசியல்  துறை பொறுப்பாளரும், கடற்புலிகளின் பயிற்சி ஆசிரியருமான  அருணன் மாஸ்ரரை காட்டி கொடுத்தவன் புலவன் என பூவிளி பலத்த கோபத்தோடு தெரிவித்துள்ளார்.


நேற்று முந்தினம் எமது தீவக பிராந்திய செய்தியாளரை தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்..


புலவன் முல்லைத்தீவு சிவபுரம் இராணுவத்தின் காவலரணில் கிளர்சஸ் அதாவது ஊண்டு கோலுடனும்,நீல நிறமுடைய சாரத்துடனும்,மருன் கலர் சேட்டுடனும் நின்று அருணன் மாஸ்ரரை கைதட்டி கூப்பிட்டார் சேரை சந்தித்துவிட்டு செல் என கூறியுள்ளார் அன்று போன எனது கணவர் இன்றுவரை அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது இது போன்று பலரது கைதுக்கு பின்னால் புலவன் என்ற சமூக விரோதியே காரணமாக உள்ளான் என பெரும் வேதனையோடு பூவிளி தெரிவித்துள்ளார்.


சாலை பகுதியில் நேரடி மோதல் ஒன்றில் தலையில் அருணன் மாஸ்ரர் காயப்பட்டு இருந்ததாக பூவிளி தெரிவித்துள்ளார்


அந்த காயத்தோடே அவர் ஏலாத நிலையில் இருந்ததை கூட இரக்கமில்லாமல் அவரை பிடித்து கொடுத்தவன் வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறான் என கண்ணீர் கொட்ட பூவிளி கூறியுள்ளார்.


பலரை காட்டி கொடுத்ததன் காரணமே புலவன் ஒருமாதத்தில் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அனுப்பப்பட்டான்.இவன் இன்றும் இராணுவத்தின் முகவராக செயற்ப்பட்டு வருகிறான் 


மேலும் தகவல் அறிய வேண்டுமானால் பூவிளி அவர்கள் தீவகத்தில் உள்ளார் அவரிடம் கேட்டு அறியலாம்.அப்போது தான் தெரியும் புலவன் என்ற தமிழின துரோகி யார் என்று…

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.