யாழில் திருமணமாகி இருபதே நாளில் பெண் ஆசிரியை பலி!


திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்! தம்புவத்தை, ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த சபேஸ் பிரவீனா (வயது 28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்!!


- இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


- குறித்த ஆசிரியை நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் வட்டவல குயில்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் திருமணம் செய்துள்ளார்!!


- இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டது! அவரை வைத்தியசாலையில அனுமதித்தவேளை எலும்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது!!


- சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்! உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.