யாழ் சுகாதார உதவியாளர் திரு கிறிஸ்டி இன்றுடன் ஓய்வு!📸

 யாழ் போதனா வைத்தியசாலையில் 36 வருட சேவையினை பூர்த்தி செய்த சுகாதார உதவியாளர் திரு கிறிஸ்டி இன்றுடன் ஓய்வு பெற்று செல்லுகின்றார்.

...............................................................................


திரு. கிறிஸ்டி அவர்கள் 1988 ஆண்டு கடமையை ஏற்று 36 வருடங்கள் சிறப்பாக சேவை செய்து இன்றுடன் ஓய்வு பெறுகின்றார் .


அவர் தன்னுடைய சேவைக்காலத்தில் எப்போதும் நோயாளிகளோடும் விடுதிகளில் கடமையாற்றும் வைத்தியர்கள்,  தாதியர்கள்  உள்ளடங்கலாக அனைத்து உத்தியோகத்தர்களுடனும் மிகவும் அன்பாக பழகுவார்.


நோயாளிகளை எப்போதும் சக்கர நாற்காலியில் அன்பாடு சேவைகளுக்காக கூட்டிச் செல்வது அவருடைய முக்கியமான கடமை ஆகும். அவ்வாறு செல்லுகின்ற போது நோயாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான ஆலோசனைகளையும் கூறுவார். 


 36 வருடங்களாக மனம் தளராமல் நோயாளிகள் மிக முக்கியமானவர்கள் என்று எப்போதும் எல்லோருக்கும் கூறி அவர்களோடு அன்பாக நடந்து கொள்வார்.


 வைத்தியசாலைகளில் உள்ள சகல உத்தியோகத்தர்களும் திரு .கிறிஸ்டி அவர்களின் செயற்பாடுகளை எப்போதும் பாராட்டுவார்கள்.


இவ்வாறு மனிதநேய உணர்வோடு சேவை செய்த திரு. கிறிஸ்டி இன்று ஓய்வு பெற்று செல்லுகின்றார்.


இன்றும் நோயாளிகளை  சேவைகளுக்காக சக்கர நாற்காலியில் அழைத்து சென்றார். தனது சேவைக்காலத்தில் இன்று கடைசி நாளாக இருந்தாலும் அது தன்னுடைய மிக முக்கியமான கடமை எனவும் கூறினார். 

இன்றைய அவரது சேவையில் அவரோடு நாங்கள் இணைந்து கொண்டோம். 


சுகாதார சேவையாளர்களின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மெச்சி பாராட்டப்பட வேண்டியவை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.